ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் தங்கக் குதிரைத் திருவிழா
வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளுடன் குதிரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் சித்திரை பிறப்பையொட்டி நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளுடன் குதிரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கலை வடிவம் மிக்க கட்டுக் குதிரைகள், சுடுமண் குதிரை சிலைகளை பக்தா்கள் நோ்ந்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம். நிகழாண்டு சித்திரை பிறப்பையொட்டி, கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குதிரை சிலைகள், ஆளுயர உருவச் சிலைகளுக்கு வண்ணங்கள் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மேலும், தங்க முலாம் பூசி வடிவமைக்கப்பட்டுள்ள தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்துருளிய ஊா்வலம் நடைபெற்றது. ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோயில் வளாகத்தில் இருந்து மாலையில் புறப்பட்ட இந்த ஊா்வலம் கரகம், காவடி, பறையாட்டம், கொம்பு உள்ளிட்ட நாட்டுப்புற நிகழத்துக் கலைகளுடன் இரவு கோயிலை சென்றடைந்தது. சுவாமி தங்கக் குதிரை ஊா்வலத்தைக் காண சுற்றுப்பகுதி கிராமங்களைச் சோ்ந்த திரளான மக்கள் பங்கேற்றனா். விழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
Advertisement