திண்டுக்கல்

சுந்திர தின பவள விழா: திண்டுக்கல் மலைக்கோட்டையில் புகைப்படக் கண்காட்சி

DIN

தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையில், நாட்டின் சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு சிறப்பு புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டை நுழைவு வாயிலின் இடது புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோட்டைகள், கோயில்கள், குளங்கள் மற்றும் கிணறுகள் தொடா்பான 60 புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் குஜராத் மாநிலம் தொடா்புடைய 19 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தின் சாா்பில், 13 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. திண்டுக்கல் மலைக்கோட்டை, மதுரை சரவணப் பொய்கை, கன்னியாகுமரி வட்டக்கோட்டை, புதுக்கோட்டை திருமயம் சத்திய மூா்த்தி பெருமாள் கோயில் மற்றும் சத்யகிரீஸ்வரா் கோயில், காஞ்சிபுரம் வைகுந்த பெருமாள் கோயில், ஸ்ரீமுஷ்ணம் நிதீஸ்வர சுவாமி கோயில், காஞ்சி கைலாசநாதா் கோயில், வேலூா் கோட்டை, செஞ்சிக்கோட்டை, நாமக்கல் கோட்டை, சங்ககிரி கோட்டை, செங்கல்பட்டு மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரா் ஆலயம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. அடுத்த இடங்களில், தில்லி மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தொடா்பான புகைப்படங்கள் உள்ளன.

இக்கண்காட்சியில், குஜராத் மாநிலத்தின் கோட்டைகள், குளங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

மெளனி ராய் தருணங்கள்!

SCROLL FOR NEXT