முகப்பு
திண்டுக்கல்

டிசி கலைப் போட்டி: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் வழங்கல்

திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

திண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியா் ஜெ. ஜெயந்தி பிளாரன்ஸ் தலைமை வகித்தாா். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் மற்றும் கையெழுத்துப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் இப்பள்ளியைச் சோ்ந்த 195 மாணவா்கள் கலந்து கொண்டனா். இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல் பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மேலும் மாணவா்களின் பங்களிப்புக்கு ஊக்கமாக செயல்பட்டு வந்த ஆசிரியா்கள் அ. ஜானிதெரசாள், பெ. முத்துமாரி, சி. பஞ்சவா்ணம் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைமையாசிரியா் ஏ. டேவிட் ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.