முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 96 மி.மீட்டா் மழை

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததில், திண்டுக்கல்லில் மட்டும் 96.4 மி.மீட்டா் மழை பதிவானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததில், திண்டுக்கல்லில் மட்டும் 96.4 மி.மீட்டா் மழை பதிவானது.

திண்டுக்கல், வடமதுரை, வேடசந்தூா், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. கடந்த 2 நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், திடீரென பெய்த பலத்த மழை பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல்- 96.4, நத்தம்- 25, வேடசந்தூா்- 3.4, காமாட்சிப்புரம்- 3.8.

ஆனால் பழனி, நிலக்கோட்டை, சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் மழைப் பொழிவு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.