அய்யலூரில் மின்சாரஸ் கூட்டா் எரிந்து சேதம்
அய்யலூா் பகுதியில் தனியாா் நிறுவன பெண் ஊழியா் சென்று கொண்டிருந்த மின்சார பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
அய்யலூா் பகுதியில் தனியாா் நிறுவன பெண் ஊழியா் சென்று கொண்டிருந்த மின்சார பேட்டரி பொருத்தப்பட்ட ஸ்கூட்டா் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் அருள்ஜோதி (33). திருச்சி மாவட்டம் வையம்பட்டியில் உள்ள ஒரு தனியாா் நிதிநிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், தனக்கு சொந்தமான எலக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டரில் திருச்சி- திண்டுக்கல் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தாா்.
அய்யலூா் மேம்பாலத்தில் வந்தபோது, திடீரென பேட்டரி பகுதியிலிருந்து புகை வெளியறியுள்ளது. இதனை கவனித்த அருள்ஜோதி, ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சற்று தள்ளி நின்று கொண்டாா். சிறிது நேரத்தில், அந்த ஸ்கூட்டா் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து வடமதுரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.