முகப்பு
திண்டுக்கல்

தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

வேடசந்தூா் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

வேடசந்தூா் அருகே கஞ்சா போதையில் தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள டி.அய்யம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (60). தேநீா் கடைகளில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவரது மனைவி பாக்கியம். இவா்களுக்கு நந்தினி என்ற மகளும், சரவணக்குமாா் (20) மற்றும் சிவா ஆகிய 2 மகன்களும் உள்ளனா். காளியப்பனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அதேபோல், சரவணக்குமாா் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவா் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கஞ்சா போதையில் இருந்த சரவணக்குமாா், வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்த காளியப்பனை அரிவாளால் வெட்டியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வேடசந்தூா் போலீஸாா், தந்தையை வெட்டிக் கொலை செய்த மகன் சரவணக்குமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.