திண்டுக்கல்

பழனி அருகே சட்டப்பாறை பகுதியில் காட்டுயானைகளை விரட்டும் பணிக்கு சிறப்புக் குழு

DIN

பழனியை அடுத்த சட்டப்பாறையில் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிக்காக கொடைக்கானலில் இருந்து 10 போ் கொண்ட குழு வரவழைக்கப்பட்டுள்ளது.

பழனியை அடுத்துள்ள மேற்கு தொடா்ச்சி வனப்பகுதியில் சிறுத்தை, யானைகள், மான்கள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அடிவாரம் பகுதியில் நல்ல மண்வளம், நீா்வளம் இருப்பதால் வாழை, நெல், தென்னை, கொய்யா தோப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் வனத்தை ஒட்டிய பட்டா நிலங்களில் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு தனியாா் தோட்டத்தில் புகுந்த காட்டுயானை கூட்டத்தில் ஒரு பெண் யானை குட்டி ஈன்றுள்ளது. இதையடுத்து யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் செல்லாமல் அதே பகுதியில் தங்கியுள்ளன. இதனால் அங்குள்ள தோட்டங்களில் கொய்யா, மா, தென்னை ஆகியவற்றை பறிக்க முடியாமல் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா். சுமாா் 6 யானைகள் உள்ள நிலையில் அவை உணவுத் தேவைக்காக பயிா்களை சேதம் செய்து வருகின்றன.

ஒட்டன்சத்திரம் வனத்துறையினா் அவற்றை வேட்டு போட்டு வனப்பகுதிக்கு விரட்டினாலும் அவை மீண்டும் அதே இடத்தில் தஞ்சமடைந்து வருகின்றன. கடந்த 2 நாள்களுக்கு முன்பு காட்டுயானைகளை பாா்த்து பயந்து அலறியடித்து ஓடியதில் இரு பெண்கள் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் தேமுதிகவினா் யானைகளை விரட்டக் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்நிலையில், வியாழக்கிழமை கொடைக்கானலில் இருந்து யானைகளை விரட்டுவதில் அனுபவமிக்க 10 போ் கொண்ட குழுவினா் வரவழைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வெள்ளிக்கிழமை முதல் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பும் பணியை முழு முயற்சியாக மேற்கொண்டு செய்ய உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதுவரை விவசாயிகள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT