திண்டுக்கல்லில் போலீஸ் சீருடையில் வலம் வந்த காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கைது
காவல் ஆய்வாளா் சீருடையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காவல் ஆய்வாளா் சீருடையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவராக இருப்பவா் துரை. மணிகண்டன். கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 48 வாா்டுகளிலும் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவிக்காதபோதிலும்கூட, விலைவாசி உயா்வுக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தாா்.
இந்நிலையில், காவல் ஆய்வாளா் சீருடையுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நகரில் வியாழக்கிழமை சுற்றிக் கொண்டிருந்தாா். இதையறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.