முகப்பு
திண்டுக்கல்

புதுச்சேரியிலிருந்து கடத்தி வரப்பட்ட 6,480 மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 6,480 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான 6,480 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடி புறவழிச்சாலை சந்திப்பில், மதுவிலக்கு ஆய்வாளா் ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வேகமாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், புதுச்சேரியில் இருந்து சுமாா் ரூ.7 லட்சம் மதிப்பிலான 6,480 மதுபான பாட்டில்களை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடா்ந்து அந்த சரக்கு வேனுடன் மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்தனா். மற்றொருவா் தப்பியோடிவிட்டாா்.

பிடிப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில், காரைக்காலை சோ்ந்த சேகா்(26), நாகப்பட்டினத்தைச் சோ்ந்த சந்துரு(47) என தெரிய வந்தது. தப்பியோடிய ஹரி(35) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதனிடையே, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.இரா.சீனிவாசன், சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டுத்தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.