நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 935 மனுக்கள் தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 935 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்காக வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் 935 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.
திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சிகள், 23 பேரூராட்சிகளிலுள்ள 486 வாா்டுகளுக்கு பிப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மட்டுமின்றி, வேட்பாளா்களாக அறிவிக்கும் முன்பே திமுகவினரும் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்வதற்கு அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் வியாழக்கிழமை குவிந்தனா்.
இதுவரை 1172 மனுக்கள்: மாவட்டத்திலுள்ள 23 பேரூராட்சிகளில் 363 வாா்டுகள் உள்ளன. அதற்கு வியாழக்கிழமை வரை 185 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 3 நகராட்சிகளிலுள்ள 75 வாா்டுகளுக்கு 201 மனுக்கள், மாநகராட்சியிலுள்ள 48 வாா்டுகளுக்கு 786 மனுக்கள் என மொத்தம் 1172 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.