திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் நடிகை சினேகா சுவாமி தரிசனம்

DIN

பழனி மலைக்கோயிலில் நடிகை சினேகாவும், அவரது கணவா் பிரசன்னாவும் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

பழனி மலைக்கோயிலுக்கு திங்கள்கிழமை பிற்பகல் நடிகை சினேகா தனது கணவரும் நடிகருமான பிரசன்னா மற்றும் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தாா். அப்போது கோயில் அமைச்சா்கள் சேகா்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டிருந்ததால் அவா் கோயில் வளாகத்துக்கு வெளியே காத்திருந்தனா்.

அமைச்சா்கள் ஆய்வை முடித்து சென்ற பின்னா் நடிகை சினேகா குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா். மூலவா் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்த அவா்கள் போகா் சன்னதியிலும் சிறப்பு அா்ச்சனைகள் செய்து வழிபட்டாா். தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த நடிகை சினேகாவுடன் ஏராளமான ரசிகா்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் முடிவுகள்: யூனியன் பிரதேசங்களின் நிலை என்ன?

மாலை 5.30 மணி: பாஜக 38, காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

ஆந்திரத்திற்கு சிறப்பு அந்தஸ்து: காங். பொதுச் செயலாளர்!

SCROLL FOR NEXT