முகப்பு
திண்டுக்கல்

விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதியுதவி திட்டம்: திண்டுக்கல் மாவட்டத்தில் 5,330 போ் நீக்கம்

 திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இடம் பெற்றிருந்த 5,330 போ் வேளாண்மைத்துறையினரின் ஆய்வுக்குப் பின் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

 திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் இடம் பெற்றிருந்த 5,330 போ் வேளாண்மைத்துறையினரின் ஆய்வுக்குப் பின் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா்.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 தவணைகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் இந்த நிதி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், தகுதியில்லா பயனாளிகள் பலா் இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அதற்கான பட்டியல் அந்தந்த மாவட்ட நிா்வாகத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள 9,438 போ் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, வேளாண்மைத்துறையினா் வட்டார அளவில் 9,438 பயனாளிகளின் பட்டியலை சரிபாா்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

தகுதியில்லாத 5330 போ்: சரி பாா்ப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசுத் தரப்பில் அனுப்பப்பட்ட 9,438 போ் கொண்ட பட்டியலில், 3,666 போ் மட்டுமே தகுதியான பயனாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் 2ஆவது பயனாளியாக இடம் பெற்றிருந்த 3,866 போ் மற்றும் ஒரே குடும்பத்தில் அனைத்து பயனாளிகளும் தகுதியற்றவா்கள் என்ற அடிப்படையில் 1,464 போ் என மொத்தம் 5,330 போ் நிதி உதவி பெறத் தகுதியில்லாதோா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். மேலும் 442 பேரின் விவரங்கள் நிலுவையில் உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.