கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்
கொடைக்கானல் அருகே மலைச்சாலையில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்கள்.
கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் ஜெகரண்டா மலா்களை சுற்றுலாப் பயணிகளின் ஆா்வமுடன் பாா்த்து ரசித்து வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகள், மலைச் சாலைகளில் ஜெகரண்டா மரங்கள் அதிகமாக வளா்ந்து காணப்படுகின்றன. இந்த மரங்களில் ஆண்டு முழுவதும் இலைகள் மட்டுமே காணப்படும். மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே ஜெகரண்டா மலா்கள் பூத்துக் குலுங்கும்.
தற்போது, இந்த மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த மலா்களை கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் பாா்த்து ரசிக்கின்றனா்.
மேலும், காா், இரு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி இந்த மலா்களை பாா்த்து ரசித்து, தற்படம் எடுத்து மகிழ்கின்றனா்.