முகப்பு
தமிழ்நாடு

கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

கொடைக்கானலில் குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குறித்து....

Updated On : 25 ஏப்ரல் 2026, 5:51 pm IST
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். - படம்: கோப்பிலிருந்து
பகிர்:

வெய்யிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதாலும், கோடை விடுமுறையைக் கொண்டாடவும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

கொடைக்கானலில் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, குணா குகை, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், பேரிஜம் ஏரி, சூழல் சுற்றுலாத் தலங்களுக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற வியாழக்கிழமை அன்று செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ள நிலையில், மலைச்சாலைகளில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால், கொடைக்கானல் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓய்வுக்காக இன்று (ஏப். 25) கொடைக்கானல் சென்றுள்ளார். இதனால், அங்கு டிரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Due to the intense heat and the summer holidays, tourists have flocked to Kodaikanal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments