முகப்பு
திண்டுக்கல்

மன்னவனூரில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

கொடைக்கானல் மன்னவனூா் ஊராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

கொடைக்கானல் மன்னவனூா் ஊராட்சி சாா்பில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊா்வலம் அரசு மேல்நிலைப் பள்ளி வளகத்தில் தொடங்கி மன்னவனூா் பேருந்து நிறுத்தம், சுற்றுச்சூழல் மையப் பகுதி, கும்பூா் சாலை, ஆட்டுப் பண்ணை சாலை, பூண்டி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக நடத்தப்பட்டது. இதில், பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

இந்நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், மேற்பாா்வையாளா் திருமுருகன், மன்னவனூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா். முருகன், துணைத் தலைவா் வி.டி. முருகவேல், ஊராட்சிச் செயலா் எஸ். வீரமணி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியை பாண்டியம்மாள், துணைத் தலைமை ஆசிரியா் சுந்தரம், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.