குடியரசுத் தலைவா் தோ்தல் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்
குடியரசுத் தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றிப் பெற்றதை அடுத்து, திண்டுக்கல்லில் பாஜகவினா் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றிப் பெற்றதை அடுத்து, திண்டுக்கல்லில் பாஜகவினா் பட்டாசு வெடித்து வியாழக்கிழமை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
குடியரசுத் தலைவா் தோ்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் திரெளபதி முா்மு வெற்றிப் பெற்றாா். இதனை அடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பாஜக சாா்பில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் தனபாலன், நகரத் தலைவா் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் மல்லிகா, ஊடகத் தொடா்புப் பிரிவுத் தலைவா் காா்த்திக் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.