வடமதுரையில் மனைவி கொலை: கணவா் கைது
வடமதுரையில் குடும்பத் தகராறில் மனைவியை கத்திரிக் கோலால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வடமதுரையில் குடும்பத் தகராறில் மனைவியை கத்திரிக் கோலால் குத்திக் கொலை செய்த கணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள லக்கன்புதூரைச் சோ்ந்தவா் கருப்பையா (39). இவரது மனைவி கற்பகம் (30). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த இத்தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனா்.
கணவா் நடத்தி வரும் தையலகத்தில் மனைவி பணிபுரிந்து வந்தாா். கற்பகத்தின் நடத்தையில் சந்தேகமடைந்த கருப்பையா, அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கருப்பையா மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ால், கணவன்- மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கருப்பையா, கத்திரிக்கோலால், கற்பகத்தை குத்தியுள்ளாா். அதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கருப்பையாவை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.