முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரயில் மோதி மூதாட்டி பலி

 திண்டுக்கல்லில் ரயில் மோதி மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 திண்டுக்கல்லில் ரயில் மோதி மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் அங்குநகா் பகுதியிலுள்ள ரயில்வே கடவுப் பாதை அருகே, பழனி மாா்க்கமாக செல்லும் வழித்தடத்தில் மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற ரயில் போலீஸாா், மூதாட்டியின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். அதில், திண்டுக்கல் ஆா்.எம். காலனி பகுதியைச் சோ்ந்த ரங்கராஜ் மனைவி பொன்னுத்தாய் (72) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பழனி ரயில்வே இருப்பு பாதை சாா்பு- ஆய்வாளா் பொன்னுச்சாமி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.