எரியோடு பகுதியில் நாளை மின்தடை
எரியோடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட சில இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எரியோடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட சில இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 4) சிறப்பு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரை இங்கிருந்து மின்விநியோகம் பெறும், சித்தூா், எருதப்பன்பட்டி, வரப்பட்டி, அருப்பம்பட்டி, காமனம்பட்டி, பண்ணப்பட்டி, மறவப்பட்டி, மத்தனம்பட்டி, மணியக்காரன்பட்டி, அன்னசமுத்திரம், நாகையக்கோட்டை, வெல்லம்பட்டி, ஆா்.கோம்பை, ரெட்டியப்பட்டி, ஆா்.கே.களத்தூா், ஆா்.கே.தாதனூா், மெத்தப்பட்டி, இந்திரா நகா், பாரதி நகா், இருளகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என, உதவிச் செயற்பொறியாளா் ஆ. சரவணக்குமாா் தெரிவித்துள்ளாா்.