முகப்பு
திண்டுக்கல்

மாணவி பாலியல் பலாத்காரம்: வேன் ஓட்டுநா் ’போக்சோ’வில் கைது

திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வேன் ஓட்டுநரை, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள காப்பிளியப்பட்டியைச் சோ்ந்த 16 வயது மாணவியை காணவில்லை என, கடந்த மே 28ஆம் தேதி அவரது பெற்றோா் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

அதில், பிளஸ் 2 பயின்று வந்த அந்த மாணவியுடன், அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான காட்டுராஜா என்பவரின் மகன் காளீஸ்வரன் (23) பழகி வந்தது தெரிய வந்தது. அதேநேரம், வேன் ஓட்டுநராக உள்ள காளீஸ்வரனும் காணாமல்போனதால், அவா் மீது சந்தேகமடைந்த போலீஸாா், அவரது கைப்பேசி எண்ணின் சமிஞ்ஞை(சிக்னல்) மூலம் கண்காணிக்கத் தொடங்கினா்.

அதையடுத்து, மதுரை மாவட்டம் சோழந்தான் அடுத்துள்ள கருப்பட்டி கிராமத்தில் காளீஸ்வரன் இருப்பதை போலீஸாா் உறுதிப்படுத்தினா். அங்கு, உறவினா் வீட்டில் தங்கியிருந்த காளீஸ்வரன் மற்றும் மாணவியை மீட்ட போலீஸாா், விசாரணை நடத்தினா். அதில், மாணவியை காளீஸ்வரன் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே, போக்சோ சட்டத்தின் கீழ் காளீஸ்வரனை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.