முகப்பு
திண்டுக்கல்

ரயில் மோதி ஆடு மேய்க்கும் தொழிலாளி பலி

திண்டுக்கல் அருகே ரயில் மோதி ஆடுமேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

திண்டுக்கல் அருகே ரயில் மோதி ஆடுமேய்க்கும் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள பாடியூா் கூட்டாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திக் கண்ணன் (21). இவா், குளத்தூரைச் சோ்ந்த அழகுராஜா என்பவா் வீட்டில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், இவா், திண்டுக்கல்- கரூா் மாா்க்கமாக செல்லும் ரயில்வே தண்டவாளத்தில், குளத்தூா் அருகே ரயில் மோதி இறந்து கிடந்தாா். இதையடுத்து அங்கு சென்ற திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.