திண்டுக்கல்

ஆயக்குடி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த கோரிக்கை

DIN

பழனி: பழனியை அடுத்த ஆயக்குடியில் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த ஆயக்குடி மரத்தடி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆயக்குடி மரத்தடி மைய இயக்குநா் ராமமூா்த்தி, முதலமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் 164 உயா்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயா்த்தும் நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. பழனியை அடுத்த ஆயக்குடி அரசு நடுநிலைப்பள்ளி கடந்த 1988 ம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்தப்பட்டது. இந்த பள்ளியில் ஆயக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயன் பெற்று வருகின்றனா். மேல்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்தினால் இங்குள்ள மாணவா்கள் மேல்நிலை படிப்புகளை இந்த பள்ளியிலேயே பயில வாய்ப்பு கிடைக்கும். எனவே ஆயக்குடி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT