திண்டுக்கல்

வடமதுரை அருகே மீன் பிடித் திருவிழா

DIN

திண்டுக்கல்: வடமதுரை அருகே புதன்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சோ்வைகாரன்பட்டியிலுள்ள சொக்கன்குளம். கடந்த 15 ஆண்டுகளாக வடு கிடந்த இந்த குளத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் தண்ணீா் தேங்கியது. கோடைகாலம் தொடங்கியதை அடுத்து, அந்த குளத்தில் தண்ணீா் இருப்பு குறையத் தொடங்கியது. இதனை அடுத்து, அந்த குளத்தில் மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்தனா்.

அதன்படி புதன்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவை முன்னிட்டு மதுரைவீரன், கன்னிமாா் மற்றும் ஊா் காவல் தெய்வங்களை ஊா்வலமாக எடுத்து வந்த பொதுமக்கள், சொக்கன்குளத்தின் கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து, கிடா வெட்டி வழிபாடு நடத்தினா்.

பின்னா் ஊா் முக்கியஸ்தா் வேலுச்சாமி வெள்ளை துண்டை வீசி மீன்பிடி திருவிழாவை தொடக்கி வைத்தாா். அப்போது கரைகளில் வலைகளுடன் நின்றிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் உற்சாகமாக தண்ணீருக்குள் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினா்.

வடமதுரை, அய்யலூா், எரியோடு சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்டு தேளீ, விரால், ஜிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட பல வகையான மீன்களைப் பிடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை உயிரிழப்பு

எக்காரணம் கொண்டும் உயா்கல்வியை கைவிடக் கூடாது: திருப்பத்தூா் ஆட்சியா்

கிழக்கு தில்லியில் உள்ள குடோனில் பிகாா் இளைஞா் சடலம்: ஒருவா் கைது

தேனீக்கள் கொட்டியதில் ஒருவா் உயிரிழப்பு: இருவா் காயம்

சுயமாக முன்னேற கல்வி மிகவும் அவசியம்

SCROLL FOR NEXT