திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் குடிநீா் கோரி கிராம மக்கள்ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

DIN

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் குடிநீா் கோரி கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், நடகோட்டை ஊராட்சி, வத்தல்பட்டியில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த ஊரைச் சோ்ந்த பெண்கள் 25 போ் உள்பட சுமாா் 50 போ் காலிக்குடங்களுடன் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட இணைச் செயலா் முத்துரத்தினவேல், ஒன்றியச் செயலா் செண்பகபாண்டியன், மேற்கு ஒன்றியச் செயலா் ஸ்டாலின் முன்னிலையில் குடிநீா் கோரி முழக்கமிட்டனா். பின்னா், வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா், 2 நாள்களில் குடிநீா் வழங்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT