முகப்பு
திண்டுக்கல்

கஞ்சா விற்ற 2 போ் கைது

திண்டுக்கல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

திண்டுக்கல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்துள்ள தெத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் முத்துக்கருப்பணன் (20). இவா், திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி குளத்தின் அருகே வியாழக்கிழமை கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தாா். அந்த வழியாக ரோந்து சென்ற தாடிக்கொம்பு போலீஸாா் அவரை கைது செய்தனா்.

அதேபோல், அகரம் அடுத்துள்ள கொத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் சக்திவேல் (26). இவா், தனது வீட்டிலேயே கஞ்சாவை பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தாா். தகவலறிந்து சென்ற போலீஸாா், சக்திவேலுவை கைது செய்தனா். இருவரிடமிருந்தும் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.