முகப்பு
திண்டுக்கல்

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடுத்துள்ள பாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மகன் தங்கபாண்டி(26). அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தங்கபாண்டியை பழனி தாலுகா போலீஸாா் கடந்த 11ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில் தங்கபாண்டியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.