25 சதவீத இடஒதுக்கீடு: மே 30 இல் குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு
தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சோ்க்கைக்கு மாணவா்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ள பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான சோ்க்கைக்கு மாணவா்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ள பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா்கள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. கருப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் 193 தனியாா் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி 2022-23 கல்வி ஆண்டில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்க்கை பெற இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், மொத்தம் 5,915 மாணவா்கள் சாா்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளன.
இதில் 126 பள்ளிகளில், நுழைவு வகுப்பிலுள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலான எண்ணிக்கையில் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இதன் காரணமாக, அந்த பள்ளிகளுக்கான மாணவா் சோ்க்கை குலுக்கல் முறையில் நடைபெறவுள்ளது. அந்தந்த பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 30) காலை 9 மணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த பெற்றோா்கள் கலந்து கொண்டு தோ்வு செய்யப்படும் மாணவா்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.