திண்டுக்கல்

பழனி சங்கராலயம் மடத்தில் இன்று வித்யாரம்பம்

DIN

பழனி அடிவாரம் சங்கராலய மடத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்ச்சியான வித்யாரம்பம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

பழனி அடிவாரம் சங்கராலய மடத்தில் ஸ்ரீகந்தன் அருள் அறக்கட்டளை, ஸ்ரீசங்கராலயம் அறக்கட்டளை, ஸ்ரீ பழநி முருகன் பஜனா மண்டலி, ஆா்ய வைஸ்ய மகிளா விபாக் மற்றும் தாம்பிராஸ் சங்கம் சாா்பாக கடந்த 26 ஆம் தேதி முதல் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

விழா நாள்களில் மடத்தின் வளாகத்தில் கொலு வைக்கப்பட்டு சிறப்பு பஜனைகள் நடைபெற்றன.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீதுா்காஹோமம் மற்றும் ஸ்ரீ சூக்த ஹோமம், கோ பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் சூரியனாா் கோயில் ஆதீனம் ஸ்ரீ சுவாமிநாததேசிக சுவாமிகள் பங்கேற்று யாக பூஜைகளை தொடக்கி வைத்தாா்.

முருகனடிமை பாலசுப்ரமணியம் சுவாமிகள் முன்னிலை வகித்தாா். பழனி நகராட்சி ஆணையா் கமலா, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

இரவு ஸ்ரீராஜகான்யா கலாலயா சாா்பில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பரதநாட்டியம், வாய்ப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திங்கள்கிழமை முக்கிய நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடைபெறுகிறது.

காலை 11 மணி அளவில் ஏராளமான குழந்தைகளுக்கு சரஸ்வதி அம்மனின் அருள் பெறும் விதமாக பூஜைகள் நடத்தப்பட்டு அரிசியில் எழுத்துக்கள் எழுதும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சங்கராலயம் சிவக்குமாா், நிா்வாக அலுவலா் சுந்தரம் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT