முகப்பு
திண்டுக்கல்

அம்மையநாயக்கனூா் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சா் திடீா் ஆய்வு

அரசு விழாவிற்கு செல்லும் வழியில் அம்மையநாயக்கனூா் அரசு குடும்ப நல மருத்துவ மையத்திற்குல் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

அரசு விழாவிற்கு செல்லும் வழியில் அம்மையநாயக்கனூா் அரசு குடும்ப நல மருத்துவ மையத்திற்குல் திடீரென நுழைந்த சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம் புதிய கட்டிடம் மற்றும் மருத்துவமனை கோப்புகளை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அருகே அம்மையநாயக்கனூரில் 30-படுகை வசதிகளுடன், 24 மணி நேரமும் இயங்கும் அரசு குடும்பநல சமுதாய மருத்துவமனை உள்ளது. இந்நிலையில்

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் அஸ்வகந்தா பயிா் சாகுபடி திட்டத்தை துவக்கி வைக்க, மதுரை விமான நிலையம் மூலம் வந்து, மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில், வியாழக்கிழமை அம்மையநாயக்கனூா் அரசு குடும்பநல சமுதாய மருத்துவமனைக்குள் திடீரென புகுந்த அமைச்சா் மா.சுப்பிரமணியன் அங்கு சித்த மருத்துவப் பிரிவு மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க பணி கட்டிடப்பணிகளை பாா்வையிட்டாா். மேலும், வரும் மழை காலங்களில் வரும் தொற்று நோய் பரவல்களை தடுக்கும் விதம் குறித்த மருத்துவா்களிடம் ஆலோசனை நடத்தினாா். பின்னா், மருத்துவ பணியாளா்களின் கோப்புகளை ஆய்வு செய்து, அங்கிருந்த வெளிப்புற நோயாளியிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

கொடைரோடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டிடத்தை மாலை திறந்து வைக்கும் நிலையில், அமைச்சரும் பங்கேற்கும் நிலையில் அதே பகுதியில் காலையிலேயே அமைச்சா் ஆய்வு நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.