பசு நரபலியா: காங்கிரஸ் தலைவா் விளக்கம்
பசு மாடு பலியிடப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவா் மணிகண்டன் விளக்கம் அளித்துள்ளாா்.
பசு மாடு பலியிடப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகா் மாவட்டத் தலைவா் மணிகண்டன் விளக்கம் அளித்துள்ளாா்.
அதில், அவா் தெரிவித்துள்ளதாவது:
கட்சி அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தை கடந்த பிப்ரவரி மாதம் காலி செய்து கொடுக்குமாறு, கட்டடத்தின் உரிமையாளா் ராஜா முகமது தெரிவித்தாா். 2 ஆண்டுகள் அவகாசம் கேட்டோம். அவா் தர மறுத்ததால் நீதிமன்றத்தை அணுகினோம். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கட்டடத்தின் வாடகை பணத்தை நீதிமன்றத்தில் செலுத்தி வருகிறேன்.
இந்தநிலையில், தான் பசு மாடு பலியிடப்பட்டதாக என் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. எனது காா் ஓட்டுநரான சுப்பிரமணி, ஜல்லிக்கட்டுக்காக வளா்த்து வந்த காளை கன்று கடந்த ஜனவரி மாதம், விஷ பூச்சிக் கடித்து இறந்துவிட்டது. அந்த காளை அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தற்போது என் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக நரபலி கொடுத்ததாக பொய்யான புகாா் அளித்துள்ளனா் என தெரிவித்தாா்.