முகப்பு
திண்டுக்கல்

பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலை பட்டதாரிகளுக்கான 34- ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலை பட்டதாரிகளுக்கான 34- ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பிஎஸ்என்ஏ கல்லூரியின் முதன்மைத் தலைவா் ஆா்எஸ்கே. ரகுராம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டி. வாசுதேவன் முன்னிலை வகித்தாா். மும்பை எல் அண்ட் டி நிறுவனத்தின் திறன் பயிற்சித்துறை தலைவா் எம். பிரகாஷ் கிருஷ்ணமூா்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ, மாணவிளுளக்கு பட்டங்களை வழங்கினாா்.

விழாவில், எம்பிஏ மற்றும் எம்சிஏ துறைகளைச் சோ்ந்த 160 மாணவா்கள் பட்டம் பெற்றனா். அண்ணா பல்கலை. அளவிலான தோ்வில் தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவா்களுக்கு, கல்லூரி சாா்பில் தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.