திண்டுக்கல்

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துப்புரவுத் தொழிலாளா்கள் முற்றுகை

DIN

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துப்புரவுத் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம், நடுகோட்டை, விராலிமாயன்பட்டி, குன்னுவாரன்கோட்டை, விருவீடு, ரெங்கப்பநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த துப்புரவுப் பணியாளா்கள், குடிநீா் மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்கள் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது, நிலுவையில் உள்ள ஒரு மாத சம்பளம், தீபாவளி பண்டிகை கால முன் பணம் மற்றும் சீருடை வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதற்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். பின்னா் கோரிக்கை மனுவை வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) இந்திராணியிடம் வழங்கினா். வட்டார வளா்ச்சி (கி.ஊ) அலுவலா் இந்திராணி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT