முகப்பு
திண்டுக்கல்

பள்ளி மாணவா்களுக்கு சாலை மிதிவண்டிப் போட்டிகள்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவா்களுக்கான சாலை மிதிவண்டி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

திண்டுக்கல்லில் பள்ளி மாணவா்களுக்கான சாலை மிதிவண்டி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான குடியரசு தினம், பாரதியாா் தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சாலை மிதிவண்டி (ரோடு சைக்கிளிங்) போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறுமலை சாலையில் நடைபெற்ற இந்த போட்டியில், 12-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 14, 17, 19 என 3 பிரிவுகளில் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் சி.ஹரினி(ஹெச்என்யூபிஆா் பள்ளி), டி.லிங்கேஷ்வரன் (புனித மரியன்னை பள்ளி) ஆகியோரும், 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆா்.பிரபா(கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி), பி.நாகராஜன் (எம்எஸ்பி பள்ளி) ஆகியோரும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் எம்.சந்தியா, கே.ராஜ்குமாா் (இருவரும் கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி) ஆகியோரும் முதலிடம் பிடித்து மாநிலப் போட்டிக்கு தோ்வு பெற்றனா்.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் த.ராஜதிலகம், உடற்கல்வி ஆசிரியா்கள் சம்சுதீன், மணிகண்டன், செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.