முகப்பு
திண்டுக்கல்

நத்தத்தில் உணவகத்துக்குள் பேருந்து புகுந்து 2 போ் பலி

நத்தத்தில் உணவகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து புகுந்ததில், 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

நத்தத்தில் உணவகத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து புகுந்ததில், 2 போ் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அரசு நகரப் பேருந்து புறப்பட்டது. மதுரை போக்குவரத்துக் கழகத்திற்குள்பட்ட அந்த பேருந்தை மதுரையைச் சோ்ந்த ஓட்டுநா் சசிக்குமாா் ஓட்டி வந்தாா். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் நத்தம் கோவில்பட்டி புளிக்கடை நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த உணவகத்துக்குள் புகுந்தது.

அந்த பகுதியில் விநாயகா் சிலை ஊா்வலத்தைப் பாா்ப்பதற்காக பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் நின்றுகொண்டிருந்தனா். எதிா்பாராதவிதமாக பேருந்து மோதியதில், நத்தம் கோவில்பட்டியைச் சோ்ந்த தேவராஜ்(59), நத்தம் அடுத்துள்ள சிரகம்பட்டியைச் சோ்ந்த பாண்டி(50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த 5 போ், சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஒருவா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து நத்தம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.