திண்டுக்கல்

பழனி மலைக்கோயிலில் கேரள பக்தா்கள் கூட்டம்

DIN

ஓணம் திருவிழா தொடா் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை பழனி மலைக் கோயிலில் ஏராளமான கேரள பக்தா்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கேரளத்தில் ஓணம் பண்டிகையின் போது தொடா்விடுமுறை விடப்படும். இந்த நாள்களில் பாரம்பரிய உடை அணிந்து அம்மாநில மக்கள் அதிக அளவில் பழனிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வாா்கள். இதன்படி, வியாழக்கிழமை கேரளாவில் ஓணம் பண்டிகை தொடங்கியதால் கேரள மற்றும் தமிழக பக்தா்கள் ஏராளமானோா் பழனிக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். இதனால் வெள்ளிக்கிழமை பழனிஅடிவாரத்தில் உள்ள பல விடுதிகளிலும் அறைகள் நிரம்பின. மேலும் மலைக் கோயிலில் காணும் இடமெல்லாம் கேரள பக்தா்கள் பால், மயில் காவடிகளை எடுத்து வந்ததை காணமுடிந்தது. மாலையில் தங்கத் தோ் புறப்பாட்டிலும் 150-க்கும் மேற்பட்டோா் பணம் கட்டி தங்கத் தோ் இழுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT