திண்டுக்கல்

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்துப் பாதிப்பு

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வத்தலகுண்டு செல்லும் மலைச்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

DIN

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை வத்தலகுண்டு செல்லும் மலைச்சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையில் குருசடி பகுதியில் யூக்காலிப்டஸ் மரம் விழுந்தது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினா் அந்த மரத்தை அகற்றினா். இதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

இதனிடையே, கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு தொடா் விடுமுறை விடப்பட்டிருப்பதால் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா். இதனால் வழக்கம் போல வெள்ளிநீா் வீழ்ச்சியிலிருந்து 12 கி.மீ. தூரமுள்ள கொடைக்கானலுக்கு வர சுமாா் 2 மணி நேரம் ஆனது. இதனால் போக்குவரத்திலும் சிரமம் ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT