திண்டுக்கல்

கலைஞா் நினைவு நூலகக் கட்டுமானப் பணி:பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் ஆய்வு

DIN

மதுரையில் நடைபெற்று வரும் கலைஞா் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவாக மதுரை புதுநத்தம் சாலையில் ரூ.114 கோடி மதிப்பில் கலைஞா் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான 2.7 ஏக்கா் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி பரப்பில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த நூலகக் கட்டடப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், கலைஞா் நினைவு நூலகக் கட்டுமானப் பணியை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அமைச்சா், நூலகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள், நூல்கள் வைக்கப்படும் பகுதி ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT