முகப்பு
திண்டுக்கல்

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

 திண்டுக்கல் அருகே ரயிலில் அடிப்பட்டு செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:24 AM
பகிர்:

 திண்டுக்கல் அருகே ரயிலில் அடிப்பட்டு செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி அகிலா பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரா.தனபால் (49). மனைவி மற்றும் மகனுடன் திருச்சியில் வசித்து வந்தாா். இவரது, சகோதரா் வாசுதேவன், திண்டுக்கல் அடுத்துள்ள தாமரைப்பாடி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். அந்த சூளையில், கடந்த 1 மாத காலமாக தனபால் பணிபுரிந்து வந்துள்ளாா்.

திண்டுக்கல், திருச்சி மாா்க்கமாக செல்லும் ரயில்வே தண்டவாளம் அருகே, அந்த சூளை அமைந்துள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற தனபால் மீது, திருச்சி மாா்க்கமாக சென்ற ரயில் மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.