முகப்பு
திண்டுக்கல்

வரத்து அதிகரிப்பால் பூக்கள் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை வீழ்ச்சி அடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

வரத்து அதிகரிப்பால் திண்டுக்கல் சந்தையில் பூக்களின் விலை வியாழக்கிழமை வீழ்ச்சி அடைந்தது.

திண்டுக்கல் பூச் சந்தையில் கடந்த வாரம் அனைத்து வகையான பூக்களின் விலையும் அதிகரித்தது. குறிப்பாக அரளிப் பூ கிலோ ரூ.700-க்கும், மல்லிகை கிலோ ரூ.1500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சுபமுகூா்த்த தினங்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வியாழக்கிழமை பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்தது.

மல்லிகை கிலோ ரூ.300, சம்மங்கி ரூ.15, ரோஜா ரூ.60, முல்லை ரூ.130, ஜாதி ரூ.200, கனகாம்பரம் ரூ.100, கோழிக்கொண்டை ரூ.40, செண்டுமல்லி ரூ.20, காக்கரட்டான் ரூ.200, செவ்வந்தி ரூ.150 முதல் ரூ.200, வாடாமல்லி ரூ.30, அரளி ரூ.150 என விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.