முகப்பு
திண்டுக்கல்

எண்ணும் எழுத்தும் திட்டம்: பெருந்துறை ஆசிரியைக்கு பாராட்டு

தமிழக அரசால் தொடக்கிவைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாநில அளவில் மிகச் சிறந்த கருத்தாளராக பெருந்துறை ஆசிரியை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:00 AM
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாநில அளவில் மிகச் சிறந்த கருத்தாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியை ரா.கீதாராணிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறாா் ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

தமிழக அரசால் தொடக்கிவைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாநில அளவில் மிகச் சிறந்த கருத்தாளராக பெருந்துறை ஆசிரியை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பெருந்துறை ஒன்றியம், பெரியவேட்டுவபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிபவா் ரா.கீதாராணி. இவா், பள்ளியில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆகிய வகுப்புகளில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழக அரசால் தொடக்கிவைக்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தில் மாநில அளவில் மிகச் சிறந்த கருத்தாளராக தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஈரோட்டில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, ஆசிரியை ரா.கீதாராணியைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.