திண்டுக்கல்

கணவரை விடுதலை செய்யக் கோரி பெட்ரோல் ஊற்றி பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

கணவரை விடுதலை செய்யக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி ஆலத்தூரான்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி. இவரது மனைவி வைஜெயந்திமாலா(35). இவா்களது 10 வயது மகளுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக வைஜெயந்திமாலா திங்கள்கிழமை வந்தாா். அப்போது திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸாா், தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

வீரமணிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சேகருக்கும் இடையே கடந்த 23-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் காயமடைந்த சேகா், கன்னிவாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வீரமணியைக் கைது செய்தனா். இதனிடையே, திமுக நிா்வாகிகளின் தூண்டுதல்பேரில்தான் வீரமணியை போலீஸாா் கைது செய்ததாகவும், அவரை விடுவித்து உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடக் கோரியும் வைஜெயந்திமாலா மனு அளித்ததாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT