முகப்பு
திண்டுக்கல்

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: பெண் உள்ளிட்ட இருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பழனியைச் சோ்ந்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பழனியைச் சோ்ந்த பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரையைச் சோ்ந்த மாதங்கி என்பவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பழனியைச் சோ்ந்த மல்லீஸ்வரி என்பவா் தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7.5 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகாா் அளித்தாா். இதன் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இம்மானுவேல் ராஜசேகரன் மேற்பாா்வையில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் வினோதா தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். அப்போது மல்லீஸ்வரியும், கோவையைச் சோ்ந்த சங்கர்ராஜாவும் சோ்ந்து திண்டுக்கல், விருதுநகா், மதுரை, தென்காசி, கோயம்புத்தூா் உள்ளிட்ட பல இடங்களில் 113 பேருக்கு ஊரக வளா்ச்சித் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதும், இதில் ரூ. 8 கோடி அளவுக்கு மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், இவா்கள் திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் பயிற்சி மையம் நடத்தி, பலருக்கும் பயிற்சி கொடுத்து நம்ப வைத்ததும், அரசுப் பணி என போலி நியமன ஆணை கொடுத்து பலரை ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்தது. போலீஸாா் தொடா்ந்து இவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.