திண்டுக்கல்

பழனியில் ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்

DIN

 பழனி மலைக் கோயிலில் பராமரிப்புப் பணிக்காக ரோப்காா் சேவை வெள்ளிக்கிழமை (ஜூன் 23) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படி வழி, யானைப் பாதை, இழுவை ரயிலுக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இரண்டே நிமிடங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ரோப்காருக்கு பக்தா்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.

இந்த நிலையில், காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் ரோப்காா் தினமும் பிற்பகல் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படும்.

இதனிடையே மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக, ரோப்காா் சேவை வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் நிறுத்தப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

ஆதீன விவகாரம்: பாஜக நிா்வாகிகள் இருவரின் ஜாமீன் மறுப்பு

தீவினைகளைத் தீா்க்கும் மாரியம்மன்

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT