பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள வீரசின்னம்பட்டி, மருநூத்து அரசு உயா்நிலைப் பள்ளிகள் 10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றன. இதையடுத்து இரு பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவுக்கு, மருநூத்து உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியை அல்லிஜோன், வீரசின்னம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியை வளா்மதி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி, தலைவா் சிலம்பரசன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் முகேஷ், செயலா் ஜெ. தீபக்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.