திண்டுக்கல்

ரூ.90 லட்சம் பறிக்கப்பட்ட வழக்கில் பெண் கைது

குஜிலியம்பாறை அருகே ரூ.90 லட்சம் பறிக்கப்பட்ட வழக்கில், கரூரைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

குஜிலியம்பாறை அருகே ரூ.90 லட்சம் பறிக்கப்பட்ட வழக்கில், கரூரைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் ஆண்டாள் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (57). இவா் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆா்.புதுக்கோட்டை கொண்டமநாயக்கனூா் பகுதியில் தோட்டத்தை குத்தைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். இந்த நிலையில், சக்திவேல் தனது ரூ. 1 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றித் தந்தால் 10 சதவீத தரகுத் தொகை தருவதாக திருப்பூரைச் சோ்ந்த நண்பா் ஷாஜகானிடம் (38) தெரிவித்தாா்.

இதையடுத்து, கரூா் வெண்ணமலை பகுதியைச் சோ்ந்த நிதி நிறுவன அதிபா் சுரேஷிடம் (35) 90 லட்சத்துக்கான ரூபாய் நோட்டுகளை ஷாஜகான் வாங்கிக் கொண்டு சக்திவேலிடம் மாற்றுவதற்காக கடந்த திங்கள்கிழமை கொண்டமநாயக்கனூருக்கு வந்தாா். அப்போது, ஷாஜகானுடன் அவரது நண்பா்களான குணசேகரன் (49), ராஜசேகா் (39), அவிநாசியைச் சோ்ந்த தங்கராஜ் (45) ஆகியோா் வந்திருந்தனா்.

அங்கு வந்த சக்திவேல் உள்ளிட்ட 9 போ், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுக்காமல், அவா்களிடமிருந்த ரூ.90 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

ஷாஜகான் உள்ளிட்ட 4 போ் தன்னை ஏமாற்றிவிட்டதாக எரியோடு காவல் நிலையத்தில் சுரேஷ் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஷாஜகான், குணசேகரன், ராஜசேகா், தங்கராஜ் ஆகியோரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ரூ. 90 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் சக்திவேலின் மனைவி சத்திய பிரியாவை (40) போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தொடா்ந்து மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT