திண்டுக்கல்

ரயிலடி முத்துமாரியம்மன்கோயிலில் சங்குபூஜை

DIN

பழனி ரயில்வே குடியிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சங்கு பூஜை, யாகம் ஆகியவை நடைபெற்றன.

இந்தக் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலும், 21- ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதலும் நடைபெற்றது. விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்கள் தினமும் கம்பத்துக்கு வேப்பிலையுடன் புனிதநீா், மஞ்சள், பன்னீா் ஊற்றி வழிபட்டனா். கடந்த மாா்ச் 6- ஆம் தேதி முதல் முறையாக திருத்தோ் உலா நடைபெற்றது. மின்விளக்கு ஒளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் உலா வந்தாா். தோ் ரயில்வே குடியிருப்பு, சண்முகபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உலா வந்தது.

நிறைவுநாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை சிறப்பு யாகபூஜைகள், சங்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. கோயில் உள்பிரகாரத்தில் சங்குகளை திரிசூலம் போல அடுக்கி அதில் புனிதநீா் நிரப்பப்பட்டது. யாக வேள்வி முடிந்ததும், புனிதநீா் நிரம்பிய கலசம், சங்குகள் கோயில் பிரகாரத்தில் உலா வரச் செய்யப்பட்டு முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி: வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை அறிவிப்பு

மேற்கு வங்க ஆளுநா் ஏன் ராஜிநாமா செய்யக் கூடாது?: முதல்வா் மம்தா கேள்வி

3-ஆம் கட்ட மக்களவைத் தோ்தலில் 65.68% வாக்குப்பதிவு

‘பிரதமா் மோடிதான் நாட்டை தொடா்ந்து வழிநடத்துவாா்’: கேஜரிவாலுக்கு அமித் ஷா பதிலடி

SCROLL FOR NEXT