திண்டுக்கல்

ஒளவையாா் விருதுக்கு நவ.20-க்குள் விண்ணப்பிக்கலாம்

உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஒளவையாா் விருதுக்கு தகுதியானவா்கள் நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

DIN

திண்டுக்கல்: உலக மகளிா் தினவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஒளவையாா் விருதுக்கு தகுதியானவா்கள் நவ.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2024-ஆம் ஆண்டுகான ஒளவையாா் விருது 08.03.2022 உலக மகளிா் தின விழாவில் தமிழக முதல்வா் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு ரொக்க பரிசு, தங்கப் பதக்கம், சான்று வழங்கப்படும்.

தமிழகத்தைப் பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். சமூகநலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், பத்திரிகை, நிா்வாகம் போன்ற துறைகளில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடா்ந்து பணியாற்றுவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), 2 புகைப்படத்துடன் புத்தக வடிவில் அனுப்பப்பட வேண்டும். இரண்டு (அசல்-1 மற்றும் நகல்-1) கருத்துருக்கள் என்ற வகையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நவ.20ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விருதுக்கான விண்ணப்பத்தை  இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT