முகப்பு
திண்டுக்கல்

சோம வார சங்காபிஷேக வழிபாடு

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திண்டுக்கல் சித்தி விநாயகா் கோயிலில் சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் 108 சங்குகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

திண்டுக்கல்: காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திண்டுக்கல் சித்தி விநாயகா் கோயிலில் சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கு காா்த்திகை மாதத்தின் 2-ஆவது சோமவாரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து, மூலவா் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 108 வலம்புரி சங்குகளில் இருந்த தீா்த்தத்தைக் கொண்டும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், ஆனந்தவல்லி

தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

Advertisement

இதேபோல, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், கன்னிவாடி சோமலிங்கேஸ்வரா் கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களிலும் சோம வார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.