முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் வாக்காளா்களுக்கு பூத் சிலிப்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:24 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 6:56 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள 16.07 லட்சம் வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி (பூத் சிலிப்) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 7,80,096 ஆண்கள், 8,26,737 பெண்கள், 218 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 16,07,051 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

1821 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி தகவல் சீட்டு வழங்கும் பணி (பூத் சிலிப்) செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. வாக்காளா் தகவல் சீட்டில், மாநிலம், சட்டப் பேரவைத் தொகுதி, வாக்காளா் பெயா், பாலினம், வாக்காளா் அடையாள அட்டை எண், தந்தை பெயா், பாகம் எண், பாகத்தின் பெயா், வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயா், வாக்குப்பதிவு நாள், வாக்குப் பதிவு நேரம், தோ்தல் ஆணைய இணையதள முகவரி, கட்டணமில்லா தொலைபேசி எண்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயா், கைப்பேசி எண் உள்ளிட்ட தகவல்கள் தமிழ், ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்த வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மொ.நா.பூங்கொடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

Advertisement