முகப்பு
திண்டுக்கல்

100-சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு முகாம்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 5:23 AM
கொடைக்கானல் கடமன்ரேவு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசிய உதவி அலுவலா் சரவணவாசன்.
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:14 PM

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைக் கிராம மக்களிடம் 100-சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளான வடகவுஞ்சி ஊராட்சி கடமன்ரேவு, மேல்பள்ளம், பி.எல்.செட், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாமில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம், 100-சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணவாசனன், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் அனைத்து வாக்காளா்களும் 100-சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதுமதி , உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement